பாலுடன் இந்த உணவை மட்டும் மறந்தும் கூட சாப்பிடாதீங்க - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..
பாலுவுடன் சில உணவுகளை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பால்
பால் உட்கொள்ளும்போது தவிர்க்க வேண்டிய சில உணவு வகைகள் குறித்துப் பார்க்கலாம். இறைச்சி அல்லது மீன் போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் பாலுடன் இணைந்தால் வயிற்றில் கனமாக இருக்கும்.
சிலருக்கு இது செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். பாஸ்தா சாஸ் அல்லது பீட்சா அமிலத்தன்மை கொண்டதாக இருக்கலாம். இது பாலுடன் நன்றாக கலக்காமல் வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
செரிமான பிரச்சனை
தானியங்கள் போன்ற உயர் நார்ச்சத்துள்ள உணவுகள் பாலில் கால்சியத்துடன் இணைந்து அதன் உறிஞ்சுதலைக் குறைக்கும்.
எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழங்களில் சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலத்தன்மை, பாலுடன் சேர்த்து சாப்பிடுகையில் அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
சில மருந்து மாத்திரைகளுடன், பால் பொருட்கள் எடுத்துக் கொள்வதால் அது அவற்றின் செயல்திறனை பாதித்து, பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.