மஞ்சள் பால் நல்லது தான்.. ஆனால் இந்த தீமைகளும் இருக்கு- உங்களுக்கு தெரியுமா?
turmeric milk
By Fathima
சளி பிடித்திருந்தாலோ, தொண்டை வலித்தாலோ, வறட்டு இருமல் இருந்தாலோ மஞ்சள் பால் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் எனக்கூறி கேள்விப்பட்டிருப்போம்.
ஆம் மஞ்சள் பாலில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன, கிருமிகளை அடித்து விரட்டும் தன்மை கொண்டது மஞ்சள் பால்.
எப்படி தயாரிப்பது?
ஒரு கிளாஸ் பாலில் 1/4 டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து பாலை நன்கு கொதிக்கவிடவும். பின்னர் பாலை வடிகட்டி, தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து இளஞ்சூடாக குடித்தால் நலம்.
பயன்கள்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கும்.
- வைரஸ் மற்றும் பக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்டதால் சளி, இருமலை குணமாக்கும்.
- முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்தும்.
- ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்வுடன் வைக்கும்.
- கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மஞ்சள் பாலை குடித்து வந்தால் நல்லது.
- வயிற்றில் புண், உடல்வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலிகளில் இருந்தும் நிவாரணம் தரும்.
- செரிமான மண்டலத்தைச் சிறப்பாக இயங்கச் செய்யும்.
- எலும்புகளை வலுப்படுத்தும்.
தீமைகள்
- பாலை குடித்ததும், உடலில் அரிப்பு ஏற்பட்டால் மஞ்சள் பாலை தவிர்க்கவும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
- அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது வயிற்றுப்போக்கு, தலைவலி, அஜீரணம், பித்தப்பை சுருக்கம் ஏற்படலாம்.
- கர்ப்பிணி பெண்கள் அதிகளவு பருகும் போது, கருப்பைச் சுவர் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.