குளிர்காலத்தில் வாட்டர் ஹீட்டர் யூஸ் பண்றீங்களா? தெரியாமக்கூட இதை செய்திடாதீங்க!
வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தும்போது செய்யக்கூடாதது பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
வாட்டர் ஹீட்டர்
குளிர்காலம் என்பதால் பலருக்கு காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிப்பது கஷ்டமான விஷயமாகும். இதனால் பெரும்பாலானோர் சுடு நீரில் குளிக்க விரும்புவார்கள். விறகடுப்பு, கேஸ் அடுப்பு ஆகியவற்றை பயன்படுத்தி வெந்நீர் வைத்த காலம் குறைந்து
தற்போது எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது உபயோகிப்பதற்கு எளிமையாக இருக்கிறது. எனினும் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் போது நீங்கள் எச்சரிக்கையுடன் மற்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
செய்திடாதீங்க!
அப்படி இல்லையென்றால் உயிரிழப்பு ஏற்படும். அதாவது, வாட்டர் ஹீட்டர்களை குளியலறையில் வைத்து பயன்படுத்த கூடாது. அது ஈரமான பகுதி என்பதால் ஷாக் ஏற்படும் அபாயம் உள்ளது. வாட்டர் ஹீட்டர் கம்பி முழுவதுமாக தண்ணீரில் மூழ்கிய பிறகு அதனை இயக்குவது அவசியம்.
தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை தெரிந்து கொள்ள தண்ணீரில் விரலை விடக்கூடாது. இதனால் ஷாக் ஏற்படக்கூடும். வாட்டர் ஹீட்டரை அணைத்து 10 நிமிடங்களுக்குப் பிறகு ஹீட்டர் ராடை தண்ணீரில் இருந்து அகற்றுவது நல்லது. பிளாஸ்டிக் வாளிகளில் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தக்கூடாது.
அது வெடிக்கும் அபாயம் அதிகம். அதேபோல் இரும்பு வாளிகளில் வைத்து ஹீட்டரை பயன்படுத்த கூடாது. இதற்குப் பதிலாக எஃகு, அலுமினியம் அல்லது மற்ற உலோகப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இதுபோன்ற விஷயங்களை வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும்போது அவசியம் கடைபிடியுங்கள்.