அதிக ஆபத்துள்ள உணவு பிரிவில் மினரல் வாட்டர்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மினரல் வாட்டரை அதிக ஆபத்துள்ள உணவு பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மினரல் வாட்டர்..
இது தொடர்பாக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடுமையான பரிசோதனைகளை செய்த பிறகு தெரிவித்திருப்பது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அதிக ஆபத்துள்ள உணவு பிரிவாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து, கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் ஆண்டுதோறும் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆய்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
அதிர்ச்சி தகவல்
ஆகவே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்பை கட்டாயம் உணவு பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்வதுடன், மேம்படுத்தப்பட்ட தர நிர்ணயங்களுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும்.
இதற்கான மத்தியஉரிமம் வைத்திருப்போர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களை குறைக்கும் நோக்குடன், ஆண்டு ஆய்வுகளை சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.