ஏசி, வாட்டர் ஹீட்டர்க்கு கூடுதல் மின்கட்டணம் - தவிர்க்க என்ன செய்யலாம்?
ஏசி, வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சார சாதனங்களை பயன்படுத்தும் வீடுகளுக்கு கூடுதல் கட்டணம் பெறப்படாது.
மின்கட்டணம்
ஏசி, வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சார சாதனங்களை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் உபயோகிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்காக, மின் வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
என்ன செய்யலாம்?
வீடுகளுக்கு நிலைக்கட்டணம் வசூலிப்பதில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலைக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்த பின்பு, அதன் மீதான அபராதம் என்பது முற்றிலும் தவறான செய்தி என குறிப்பிட்டுள்ளது.
ஒரே நேரத்தில் கூடுதலாக எல்லா அறையிலும் புதிதாக வாங்கிய ஏசி, கூடுதல் டிவி, எல்லா அறையிலும் விளக்கு எரிந்தால் உங்களின் மின்சார லோட் அதிகமாகும். இப்படி லோட் அதிகமானால் அபராதம் விதிக்கப்படும். வருடத்தில் 3 முறைக்கு மேல் லோட் அதிகமாகும் பட்சத்தில் இது செயல்படுத்தப்படும்.