இருமியதால் வயிற்றிலிருந்து வெளியே வந்த குடல் - காலை உணவின் போது நடந்த சோகம்
முதியவர் ஒருவர் இருமும் போது வயிற்றில் இருந்து குடல் வெளிய வந்துள்ளது.
ப்ளோரிடா
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் 63 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு சிறுநீரக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.
அவர் உடல் நலம் அடைந்ததும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தையல் பிரிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களில் அவரது மனைவியுடன் சேர்ந்து காலை உணவு உண்ணும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.+
வெளியே வந்த குடல்
உணவு உண்ணும் போது இருமல் வந்ததையடுத்து அவரும் வேகமாக இருமியுள்ளார். அப்பொழுது அடிவயிற்று குடலானது மேலே வருவது போன்ற உணர்வு அவருக்கு எழுந்துள்ளது. அப்பொழுது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் இருந்த குடலானது வயிற்றில் இருந்து வெளியே வந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வெளியே வந்த தனது குடலை சட்டையால் இறுக கட்டியுள்ளார். அதன் பின் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு ,மருத்துவர்கள் குடலை மீண்டும் உள்ளே வைத்து தைத்து, அவரை குணப்படுத்தியுள்ளனர். தற்பொழுது முதியவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.