டிக்கெட் முன்பதிவு; அதிரடி சலுகை அறிவித்த விமான நிறுவனம் - என்ன செய்யவேண்டும்?
டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் சலுகை பெற வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ‘ஸ்பிளாஷ்’ விற்பனை சலுகையின் ஒரு பகுதியாக, 2 வகையான டிக்கெட்டுகளை வழங்குகிறது. அதில் ஒன்று எக்ஸ்பிரஸ் லைட் ஃபேர்ஸ்.
இந்த விமான டிக்கெட்டின் விலை ரூ. 883-ல் இருந்து தொடங்குகிறது. இதற்கு கன்வினியன்ஸ் கட்டணம் இருக்காது. மற்றொன்று எக்ஸ்பிரஸ் வேல்யூ கட்டணங்கள். இந்த டிக்கெட்டுகளின் விலை ரூ. 1,096 முதல் தொடங்குகிறது.
ஸ்பிளாஷ் சலுகை
இந்த சலுகை ஜூன் 28ஆம் தேதி வரை மட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்புவோர் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30, 2024 வரை பயணம் செய்யலாம். இதில் கூடுதல் தள்ளுபடி நன்மைகளையும் பெறலாம். ஆனால் இந்த டிக்கெட் தள்ளுபடி சலுகை குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே சலுகையைப் பெற வாய்ப்புள்ளது.
இதில் பணம் திரும்பப் பெறப்படாது. முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய ரத்து கட்டணமும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.