take-off ஆன விமானம்; திடீரென கழன்று விழுந்த டயர்..பதறிய பயணிகள் - வைரலாகும் வீடியோ!
வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து டயர் கழன்று விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பறந்த விமானம்
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், ஜப்பானுக்கு செல்லும் பயணிகளின் விமானம் நேற்று புறப்பட்டுள்ளது.
இதில் 235 பயணிகள், 14 ஊழியர்கள் கொண்டு டேக்- அப் ஆனா இந்த விமானத்தின் ஒரு டயர் திடீரென கழன்று வேகமாக தரையில் விழுந்தது. விமான நிலையத்தில் உள்ள ஊழியர்களின் பார்க்கிங்கில் இந்த டயர் விழுந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
வைரல் வீடியோ
அந்த டயர் ஒரு காரின் கண்ணாடியில் விழுந்த பின், அருகில் உள்ள வேலியில் மோதி விழுந்தது. இதனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து, 6 டயர்களில் ஒன்று இல்லாமல் வெகு நேரம் பறந்தால் விமானம், பாதுகாப்பு கருது அவரசரமாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஓடுபாதையின் பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானத்தை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.
பின்னர், அதில் இருந்த பயணிகளுக்கு வேறு ஒரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
