நேபாளத்தில் விமானம் விழுந்து நொருங்கியது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்கள்
நோபளத்தின் போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே 72 பயணிகளுடன் சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொருங்கி தீ பிடித்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
40 பேர் உயரிழப்பு
விமானத்தில் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், கொரியாவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு பயணியும் பயணித்ததாக கூறப்படுகிறது.
விமானத்தில் மொத்தம் 68 பயணிகள், 4 பணியாளர்கள் இருந்ததாக காத்மண்ட் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பழைய விமான நிலையத்திற்கும் போக்கரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே விபத்துக்குள்ளானது.
விமானம் விபத்துக்குள்ளான செட்டி ஆற்றின் பள்ளத்தாக்கில் 120 ரேஞ்சர்களும் 180 ராணுவ வீரர்களும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக நேபாள ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.
விமானம் விபத்திற்குள்ளானது எப்படி?
மேலும் அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், காத்மண்டுவில் இருந்து இரவு 10.32 மணிக்கு விமானம் புறப்பட்டது. விபத்து நடந்த ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விபத்து நடந்த இடத்திலிருந்து 16 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
விமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
விமானம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.