மீன் வாங்கினா இதை மறக்காதீங்க; இவ்வளவுதான் சாப்பிடனும் - சுகர் இருக்குறவங்க எது சாப்பிடலாம்?
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் ஆரோக்கியமான வடிவமாக இருப்பது மீன்.
மீன்
மீன்களில் நிறைய கால்சியம், பலவிதமான தாதுக்கள், வைட்டமின் A, D, அயோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சிறிய மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ரத்த அழுத்தத்தை சமன்செய்து மூட்டு நோய்கள், சொரியாசிஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது. ஆழ்கடலில் பிடிக்கப்படும் பெரிய மீன்களை வாங்கக்கூடாது. முட்கள் அதிகமாக இருக்கும் மீன்களையும் வாங்க கூடாது. ஆழ்கடல் மீன்களில், நிறைய ரசாயன பொருட்கள் நிறைந்திருக்குமாம்.
நன்மைகள்
தினமும் 50 கிராம் மட்டுமே மீன் சாப்பிடுவது சிறந்தது. வாரத்திற்கு 350 கிராம் மீன்கள் மட்டுமே நாம் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மீன்களை கொஞ்சம் கல் உப்பு, தயிர் கலந்த நீரில் கழுவலாம். அல்லது உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு கொண்டும் கழுவலாம்.
மீனில் ஒமேகா 3 அமிலங்கள் அதிகமாக இருப்பதால், கொழுப்பு மீன்கள் நீரிழிவு ஆபத்தை குறைப்பதாக கூறப்படுகிறது. சால்மன், ஹெர்ரிங் போன்ற கொழுப்பு மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. உடலிலுள்ள இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும், ஜிலேபி கெண்டை, டுனா மீன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்களை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிடலாம்.
சங்கரா மீனிலுள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் உதவுகிறது.
மத்தி மீன் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். நீரிழிவு வராமல் தடுக்கவும் இந்த மத்தியை தொடர்ந்து சாப்பிடலாம்.