வெடித்து சிதறிய பெட்ரோல் பங்க்..உடல் சிதறி உயிரிழந்த 4 பேர் உயிரிழந்த கொடூரம் - பகீர் பின்னணி!
ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் வெடித்துச் சிதறியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் பங்க்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் எல்பிஜி டேங்கர் லாரி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
அந்த வழியாக வந்த டிட்ரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதிக வேகத்துடன் சிஎன்ஜி டேங்கர் உள்ளிட்ட வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.அப்போது சிஎன்ஜி பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள பெட்ரோல் பங்க்-க்கும் மளமளவென தீ பரவியது.இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும் இந்த விபத்தில், பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களும் தீ பற்றி எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்து
இது குறித்து தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையான முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் தீ கொளுந்துவிட்டு எரிவது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.