கார் ஷோரூமில் பயங்கர தீ - 15க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்!
கார் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
தீ விபத்து
கோவை சூலூர் அருகே திருச்சி சாலையில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய கார் விற்பனை மற்றும் பழைய கார்கள் பழுது நீக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்கு திடீரென தீ மளமளவென எரியத் தொடங்கியுள்ளது. உடனே, நிறுவனங்களில் பணிபுரிவோர் முதல் கட்ட தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து தீயணைப்பு படை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
15 கார்கள் சேதம்
இதற்கிடையில். கட்டடத்தின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 15க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசமானது. தொடர்ந்து, தகவலையடுத்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாம் போராடி தீயனைப்பு வீரர்கல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஷோரூமுக்குள் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கார்களை ஊழியர்கள் அப்புறப்படுத்து பாதுகாத்தனர். இரவு நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாத காரணத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தற்போது தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.