தைவானின் 13 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - 46 பேர் பலி - 41 பேர் படுகாயம்
தைவானின் கவோசியுங் நகரில் உள்ள 13 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டில் இன்று அதிகாலை 3 மணிக்கு 13 மாடி கட்டடிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த தீ மளமளவென பரவியது. இதனையடுத்து அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ பரவியது.
இதனால், கரும்புகை வான் வரை பரவி நீண்டது. இது குறித்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேர் காயமடைந்துள்ளதுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.