விக்ரம் படம் ஓடிய தியேட்டரில் தீ..ரசிகர்கள் அலறி அடித்து ஓட்டம்..!

Vikram Movie Fire
By Thahir Jun 08, 2022 05:04 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள் விக்ரம் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையில் தீ பற்றி எரிந்ததால் படம் பார்த்த ரசிகர்கள் அலறி அடித்து ஓடினர்.

விக்ரம் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா,விஜய் சேதுபதி,ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விக்ரம் படம் ஓடிய தியேட்டரில் தீ..ரசிகர்கள் அலறி அடித்து ஓட்டம்..! | Fire At Vikram Movie Theater

இத்திரைப்படம் கடந்த ஜுன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாட்கள் முதல் திரைப்படம் பார்பதற்கு திரையரங்கில் கூட்டம் அலைமோதி வருகிறது.

தீ பிடித்து எரிந்த திரை 

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு ஜெய திரையரங்கில் விக்ரம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு திரைப்படம் வழக்கம் போல் திரையிடப்பட்டுள்ளது.அப்போது தீடீரென திரை தீ பற்றி எரிந்துள்ளது.

விக்ரம் படம் ஓடிய தியேட்டரில் தீ..ரசிகர்கள் அலறி அடித்து ஓட்டம்..! | Fire At Vikram Movie Theater

இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் அலறி அடித்துக்கொண்டு தியேட்டரை விட்டு வெளியே ஓடினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

200 கோடி அப்பு..5 நாளில் கோடிகளை குவித்த விக்ரம் - இயக்குநர்களுக்கு பைக் வழங்கிய கமல்ஹாசன்..!