கடலில் சிறுநீர் கழித்தால் ரூ.67,000 அபராதம் - குழப்பத்தில் மக்கள்!
கடலில் சிறுநீர் கழிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் தூய்மை
ஸ்பெயின், மார்பெல்லா கடலில் தண்ணீர் தூய்மையை பாதுகாப்பதற்கான புதிய விதிமுறை பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலில் சிறுநீர் கழிக்கும் நபர்களுக்கு €750 (சுமார் ₹67,000) வரை அபராதம் விதிக்கப்படும்.
ஒரு வருடத்திற்குள் இதுபோன்ற செயலில் ஈடுபடும் அதே குற்றவாளிகள் மீண்டும் பிடிபட்டால் €1,500 (தோராயமாக ரூ.1 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
அபராதம்
மாசுபாட்டை தடுக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று கூறப்படுகிறது. இது சட்டமாக இயற்றப்படுவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துக்காக காத்திருக்கிறது என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகள் குறித்து கேட்ட மக்கள், இந்த சட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?
யார் சிறுநீர் கழிக்கிறார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு அரசு தரப்பில், கடற்கரையோரங்களில் நின்று கடலில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு இது பொருந்தும்.
புதிய விதியானது கடலில் சிறுநீர் கழிப்பது பற்றியது அல்ல, மாறாக கடற்கரையில் மோசமான நடத்தையை முற்றிலுமாக நிறுத்துவது எனத் தெரிவித்துள்ளது.