குளிக்கும்போது சிறுநீர் கழித்தால் நன்மையா? தீமையா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

life-style-health
By Nandhini Jul 05, 2021 06:12 AM GMT
Report

குளிக்கும்போது சிறு நீர் கழிக்கும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. இது நல்ல பழக்கமா? கெட்ட பழக்கமா? என்பதையும் தாண்டி மருத்துவத்துறை இதற்கு வேறுவிதமான விளக்கம் கூறுகிறது.

குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதால், 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது. குளித்துக் கொண்டிருக்கும் போது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதால் ஒருசில நன்மைகள் உள்ளது.

அது என்னவென்று தெரிந்தால், இனிமேல் குளிக்கும் போது நீங்களும் சிறுநீர் கழிப்பீர்கள். சரியான இடைவெளியில் சிறுநீர் கழிப்பது என்பது மிகவும் ஆரோகியமான ஒரு செயல் ஆகும். அதுவும் குளிக்கும் போது நின்றுக் கொண்டே சிறுநீர் கழிக்கும் பழக்கம் பலரும் கொண்டிருப்பர். அது சரியா தவறா என தெரியாது.

ஆனாலும் ஒரு சிலர் இயற்கையாகவே இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். நாம் குளிக்கும்போது சிறுநீர் கழிக்கிறோமெனில், அது கண்டிப்பாக எமது கால்களில் பட்டுத்தான் நீர்வீழ்ச்சிபோல் வழிந்தொடும்.

இதனால் சிறு நீரிலுள்ள யூரியா எமது கால்களில் ஏதேனும் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகின்றது. குறிப்பாக சொரியோஸிஸ் மற்றும் பூஞ்சை நோய்கள் காலை அண்டவிடாமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு யூரியாவுக்கு உண்டு.

சரும உபாதைகளுக்கு எதிராக தயாரிக்கப்படும் பல கிரீம்களில் சிறு நீரில் கலந்துள்ள யூரியாவைத்தான் உபயோகிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன.

இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது. அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிப்பதும் நிகழ்கிறது.

அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை. இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.    

குளிக்கும்போது சிறுநீர் கழித்தால் நன்மையா? தீமையா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்! | Life Style Health