நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம்..!
டெல்லியில் இன்று சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.
நிா்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 54 -வது கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அதிலும் குறிப்பாக டெபிட், க்ரெடிட் கார்டுகள் மூலம் ₹2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் வசூல் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
GST கவுன்சில் கூட்டம்
ஆயுள் காப்பீடு தவணைக் கட்டணத்திற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.