அங்க விட இங்க முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - நிர்மலா சீதாராமன் ஆவேசம்

Smt Nirmala Sitharaman United States of America India
By Sumathi Apr 12, 2023 04:44 AM GMT
Report

பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் 

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கவும் அங்கு சென்றுள்ளார்.

அங்க விட இங்க முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - நிர்மலா சீதாராமன் ஆவேசம் | Muslims Are Safer In India Nirmala Sitharaman

இதற்கிடையில், வாஷிங்டனில் பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் எகனாமிக்சில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அதில், இந்தியாவுக்கு முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். முதலீடுகளை பெறுவதில் ஆர்வமுள்ள ஒருவர் என்ற முறையில்,

முஸ்லீம் பாதுகாப்பு

களத்தில் கால் கூட வைக்காத நபர்களால் உருவாக்கப்படும் கருத்துக்களை கேட்பதை விட இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வாருங்கள் என்று கூறுவேன். பாகிஸ்தானில் வாழும் முஸ்லீம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் சிறப்பாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

ஏழை மக்களை குறைந்தபட்சம் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்துவதே அரசாங்கத்தின் அணுகுமுறை ஆகும். இந்தியாவில் அடிப்படை வசதிகளை வழங்குவதில் நாங்கள் நிறைவை அடைந்து இருக்கிறோம்.

அவர்கள் குடியிருக்க நல்ல வீடுகள், கழிப்பறைகள், குடிநீர் குழாய்கள், மின்சாரம், நல்ல சாலை, போக்குவரத்து வசதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிதி சேர்க்கை மூலம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.