காதல் திருமணம்.. வெறும் 6 மாதத்தில் மனைவி செய்த காரியம் - கணவருக்கு விழுந்த வெட்டு!
திருமணமான ஆறே மாதத்தில் பெண் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
சென்னை ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (19). இவரது கணவர் வடிவேல் (33), இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது, இதனால் அவர் கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அப்பொழுதுஅவரது தந்தை, "திருமணம் ஆகி 6 மாதத்திலேயே கணவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டாயே?" என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா நகர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில், அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மீனவர்கள் உதவியுடன் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, ஆனால் அவர் பலனின்றி உயிரிழந்தார். ராஜேஸ்வரியின் அண்ணன் ராஜேஷ் (25) தனது நண்பர்களுடன் ஆர்.கே.நகரில் உள்ள வடிவேல் வீட்டுக்கு சென்றார். "என் தங்கை ராஜேஸ்வரி சாவுக்கு நீ தான் காரணம்" என்று கூறி நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வடிவேலின் தலையில் வெட்டினார்.
மேலும் சரமாரியாக அடித்து உதைத்து இடது கையையும் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.