திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை! விசாரணையில் தெரியவந்த உண்மை

india tamilnadu suside
By Irumporai Apr 30, 2021 08:09 AM GMT
Report

மதுரவாயலில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.மாத்திரை சாப்பிடவில்லை என பெற்றோர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரவாயல் அடுத்த நூம்பல், செல்வ கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி இவருக்கு பிரபாவதி(25), என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கருப்பசாமி ராமாபுரத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு நேற்று காலையில் வீட்டிற்கு வந்து கருப்பசாமி பிரபாவதி வீட்டில் தூக்கு போட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன பிரபாவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை! விசாரணையில் தெரியவந்த உண்மை | Teen Commits Suicide After Being Forced

விசாரணையில் பிரபாவதிக்கு தைராய்டு பிரச்சனை இருப்பதால் மாத்திரை சரிவர சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கருப்பசாமி அவரது மாமியாரிடம் தெரிவித்ததையடுத்து பிரபாவதியின் தாய் தனது மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பிரபாவதி தற்கொலை செய்துகொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பிரபாவதியின் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.