ஒரே நாளில் 22 பேர் நீரில் மூழ்கி பலி - பண்டிகையின் போது துயரம்!
ஒரே நாளில் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்டிகை
பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்துக்களால் ஐப்பசி மாதத்தில் ஜிவித்புத்ரிகா எனும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படும்.
இந்த பண்டிகையின் போது ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடி தங்கள் விரதத்தை பெண்கள் முடிப்பார்கள். அதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேர் கடந்த 24 மணி நேரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
22 பேர் பலி
அதன்படி, போஜ்பூரில் 5 பேர், ஜகனாபாத்தில் 4 பேர், ரோஹ்டாஸ் மற்றும் பாட்னாவில் தலா 3 பேர், தர்பங்கா மற்றும் நவாடாவில் தலா 2 பேர், மாதேபூர், கைமூர் மற்றும் அவுரங்காபாத்தில் தலா ஒருவர் என மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் நிவாரணமாக தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.