விநாயகர் சிலையை கரைக்க சென்ற 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
விநாயகர் சிலையை கரைக்க சென்ற 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ஹரியானா மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது இரு வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலம் சோனிபேட் பகுதியின் மிமார்பூர் காட் என்ற இடத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் உறவினர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இவர்களின் உடல்களை மீட்ட பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதேபோல், மகேந்திரகர் பகுதியில் உள்ள கால்வாயில் கிராம மக்கள் விநாயகர் சிலையை கரைக்க சென்றனர். அப்போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஒன்பது பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதில் எட்டு பேர் இதுவரை மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட 8 பேரில் 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.