சாத்தானுக்குக் குழந்தையை பலி கொடுத்தால்..தந்தையின் திட்டம் - பகீர் கிளப்பும் காட்சி!

Bengaluru Crime
By Vidhya Senthil Oct 30, 2024 04:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 சாத்தானுக்குக் குழந்தையைப் பலி கொடுக்க தந்தை திட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் .இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

black magic

அப்போது சதாம் தனது மத அடையாளத்தை மறைத்து, தன்னை ஒரு இந்து என்று கூறி அந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சதாமின் மனைவி கர்ப்பமானார். பிரசவத்தின்போது மருத்துவமனையில் ஆதார் அட்டையைக் கேட்டபோதுதான் அவரது உண்மையான பெயர் சதாம் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் காதல் கணவர் என்பதால்,இதனை அந்த பெண் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு சதாம் மாந்திரீகம், மந்திரம் உள்ளிட்ட விவகாரங்களில் அதீத ஈடுபாடு கொண்டவராக மாறியுள்ளார். இதனால் அடிக்கடி வீட்டில் நள்ளிரவு நேரங்களில் பூஜைகளை நடத்தி வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பழக்கம்..முருங்கை சாம்பார் ஊற்றி கணவனை கொலை செய்த மனைவி!

இன்ஸ்டாகிராமில் பழக்கம்..முருங்கை சாம்பார் ஊற்றி கணவனை கொலை செய்த மனைவி!

தனது குழந்தையைச் சாத்தானுக்குப் பலி கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் தங்களுக்குப் புதையல் கிடைக்கும் என்றும் சதாம் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த சதாமின் மனைவி, துமகுருவில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

 புதையல் 

ஆனால் அங்கும் சென்று குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு சதாம் தகறாரில் ஈட்டுப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சதாமின் மனைவி கே.ஆர்.புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை அந்த புகாரை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

father who planned to sacrifice child for treasure

இதைத் தொடர்ந்து அந்த பெண்  பெங்களூரு காவல் ஆணையர் தயானந்திடம் தனது கணவர் குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்ட காவல் ஆணையர் பெண்ணின் புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த கே.ஆர்.புரம் காவல்நிலைய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

சாத்தானுக்குக் குழந்தையைப் பலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையில் தந்தை திட்டமிட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.