பிரசவ வலியால் துடித்த பெண்.. விடுமுறை தராத உயரதிகாரி.. பறிப்போன உயிர் - அதிர்ச்சி சம்பவம்!
வலியால் துடித்த கர்ப்பிணிக்கு அலுவலகத்தில் விடுமுறை தராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவ வலி..
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால விடுமுறை மற்றும் சலுகைகள் அளித்து வருகின்றன. அந்த வகையில், அரசு ஊழியர்களான நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதக்காலம் ஊதியத்துடன் விடுமுறையை இந்திய அரசு வழங்குகிறது.
ஆனால் ஒடிசாவில் ஒரு கர்ப்பிணி அரசு ஊழியருக்கு இந்த விடுமுறை அளிக்கப்படாதது பேரத்திர்ச்சியாக உள்ளது. அதாவது, ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் ஊழியராக பர்ஷா பிரியதர்ஷினி என்பவர் வேளை செய்து வருகிறார்.
இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இருப்பினும் விடுமுறை ஏதும் எடுக்கமல் தினமும் வேலைக்கு வந்துள்ளார், இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அவருக்கு திடீரென கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
அத்தருணத்தில் தன் உயரதிகாரியும் ‘குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரி’யுமான சிநேகலதா சாஹூவிடம், தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி வேண்டியுள்ளார். ஆனால், அவருடைய வேண்டுகோளை அந்த உயரதிகாரி புறக்கணித்துள்ளார்.
உயரதிகாரி
வேறு மாற்று ஏற்பாடும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் பர்ஷா தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த பின் அவர்கள் வந்து அவரை அழைத்துகொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அவஐ மருத்துவர்கள் சோதித்து பார்க்கையில், பர்ஷாவின் குழந்தை இறந்துவிட்டதாக தெரியவந்தது.
இதனால் கடும் மனவேதனை அடைந்த அவர், இந்த துயரத்திற்கு சிடிபிஓவிவின் மனரீதியான துன்புறுத்தலும், அவருடைய அலட்சியமுமே காரணம் எனக்கூறி அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய துணை முதல்வர் பிரவதி பரிதா, “இந்த சம்பவம் குறித்து கேந்திரபாரா கலெக்டருடன் விவாதித்துள்ளேன். உடனடியாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என கவலை தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு, முழு அறிக்கை சமர்பிக்கப்படும் என கூறப்பட்டது. அதேசமயத்தில், இந்த சம்பவம் பற்றி பதிலளித்த சிடிபிஓ சிநேகலதா சாஹூ, "பர்ஷாவின் வலி குறித்து எனக்குத் தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.