மனைவியுடன் தகராறு - ஆத்திரத்தில் 3 வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தை!

Tamil nadu Chennai Crime
By Karthikraja Jun 03, 2024 06:24 AM GMT
Report

போரூர் ஏரியில் மகனை வீசி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

போரூர் ஏரி

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் 3 வயது சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர், போரூர் ஏரி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி அந்த சிறுவனை தூக்கியவர்,யாரும் எதிர்பாராத விதமாக போரூர் ஏரியில் தூக்கி வீசிவிட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். 

மனைவியுடன் தகராறு - ஆத்திரத்தில் 3 வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தை! | Father Throw Away 3 Age Son On Porur Lake

இந்த காட்சியை கண்டு, ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஏரிக்குள் நீந்திச் சென்று ஏரியில் தத்தளித்து கொண்டிருந்த சிறுவனை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் அந்த சிறுவனை போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

சொந்த மகன் என்று கூட பாராமல் தாய் செய்த கொடூரம்; மிரண்டுபோன தந்தை - viral வீடியோ!

சொந்த மகன் என்று கூட பாராமல் தாய் செய்த கொடூரம்; மிரண்டுபோன தந்தை - viral வீடியோ!

போலீஸ் விசாரணை

போலீசார் நடத்திய விசாரணையில் ஏரியில் சிறுவனை வீசிவிட்டு சென்றது, சென்னை தலைமை செயலக காலனியை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், அவர் ஏரியில் வீசி சென்ற சிறுவன் அவரது மகன் தர்சன் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் மோகன் ராஜ், தன் மனைவி பிரியாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை வீட்டின் உள்ள அடைத்து வைத்து வெளிப்புறமாக கதவை பூட்டிச்சென்றுள்ளார். இதன் பின் கோபத்தில் தனது 3 வயது மகனை அழைத்து சென்று ஏரியில் வீசியுள்ளார்.

இது குறித்து அயனாவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், சிறுவனின் தாய் பிரியாவுடன் போரூர் போலீஸ் நிலையம் வந்தனர்.

அங்கு தாயிடம் சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தனர். பெற்ற மகனையே ஏரியில் வீசி விட்டு தப்பி ஓடிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.