நீட்டில் தேர்ச்சி.. மருத்துவக்கல்லூரியில் சேர இருந்த 2 மாணவர்கள் - ஏரியில் மூல்கி பலியான சோகம்!
மருத்துவ கல்லூரியில் சேர இருந்த மாணவர்கள் ஏரியில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள்
சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ரிஷிகேஷ், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிஷ். இவர்கள் இருவரும் மாங்காடைச் சேர்ந்த ரிஸ்வான் (18), சாம் (18) ஆகிய இருவருடன் நேற்று மாலை, செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்பொழுது அவர்கள் ஏரியை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தனர். ஹரிஷ் மற்றும் ரிஷிகேஷ் ஏரியின் 4ஆவது மதகின் கீழே இறங்கி கால்களை நீரில் நனைத்து விளையாடிய போது திடீரென நிலை தடுமாறி இருவரும் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர்.
பரிதாப பலி
இந்நிலையில், அவரகளது சக நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர், பின்னர் தகலவறிந்து வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் போராடி இருவர் உடல்களையும் மீட்டனர். மேலும், விசாரணையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரிஷிகேஷ் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஹரிஷ் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கும் காத்திருந்ததாக தெரியவந்தது.
தற்பொழுது நண்பர்களுடன் சேர்ந்து ஏரியை சுற்றி பார்க்க வந்தபோது இருவரும் உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.