மகனை துடிதுடிக்க குத்தி கொன்ற தந்தை - காரணத்தை கேட்டு அதிர்ந்த காவல்துறையினர்!
தந்தை பீர்பாட்டிலால் மகனைக் குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னையில் உள்ள மாங்காடு அம்பாள் நகரில் வசித்து வந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். தட்சிணாமூர்த்திக்குக் குமரன்(38) என்ற மகன் உள்ளார்.
சமீபத்தில் குமரனுக்குத் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து தந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சுழலில் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் மது அருந்திவிட்டு போதையில் தகராறு செய்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை மதுபோதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. இந்த தகராறு ஒரு கட்டத்தில் முற்றவே ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி வீட்டிலிருந்த பீர் பாட்டிலை எடுத்து மகன் குமரன் தலையில் அடித்துள்ளார்.
கொலை
பின்பு உடைந்த பீர் பாட்டிலைக் கொண்டு மகன் என்று பாராமல் குமரனைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குமரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தட்சிணாமூர்த்தியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.