நரகமாக மாறிய இந்தோனேசியா - கொத்து கொத்தாக மடிந்த மனித உடல்கள்!
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியா
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில், லெவோடோபி லக்கி என்ற மலைப் பகுதியில் இன்று அதிகாலை (நவ.,04) எரிமலை வெடித்துச் சிதறியது. அதிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பு வழிந்தோடியதோடு, கரும் புகையும் அப்பகுதியைச் சூழ்ந்துள்ளது.
எரிமலை வெடிப்பால் அருகிலுள்ள கிராமங்களில் பல கிலோமீட்டருக்குச் சாம்பல் நிரம்பியுள்ளது. இதனால் இலே புரா மாவட்டத்தில் துலிபாலி கிராமம், நோபோ, நுரபெலன் மற்றும் ரியாங் ரீட்டா ஆகிய 4 கிராமங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
மேலும் 4 கிமீட்டர் தூரம் வரை பாறைகள் வெடித்துச் சிதறியதால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், பலர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
எரிமலை
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் இந்தோனேசியா ஹல்மஹேரா தீவில் உள்ள மவுண்ட் இபு எரிமலை வெடித்தது.இந்த சம்பவத்தால்7 கிராமங்களின் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
12,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இப்போது இன்னொரு எரிமலை வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.