சீனாவில் கிடைத்த ராமாயண சுவடுகள்..வியப்பில் மக்கள் - ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
சீனாவில் ராமாயண சுவடுகள் கிடைத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ராமாயணம்
இராமாயணம் இந்து மத சமயத்தில் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாக உள்ளது. ராமர் மற்றும் அவரது மனைவி சீதை ஆகியவர்களின் வாழ்க்கையை கூறும் இந்த இதிகாசம் உறவுகளின் வலிமையை எடுத்துறைப்பதாக அமைந்துள்ளது.
புராண கதை என நம்பப்படுவதுக்கு ஏதுவாக இந்திய மற்றும் இலங்கையில் இதன் சுவடுகள் இன்று வரை இருப்பது தெரியும். ஆனால் தற்போது நம் அண்டை நாடான சீனாவில் ராமாணயத்தின் சுவடுகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புத்த மத நுால்களின் வாயிலாக, ராமாயணம் தொடர்பான கருத்துக்கள், சீனாவில் பல நுாற்றாண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்தது. இதன் வாயிலாக சீனாவில் ஹிந்து மதத்தின் தாக்கம் இருந்துள்ளது என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள்
இந்திய துாதரகம் சார்பில், ராமாயணம் தொடர்பான கருத்தரங்கம் பீஜிங்கில் நடைபெற்றது. அதி கலந்துகொண்ட பல சீன வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், இந்த சுவடுகள் குறித்து கூறியுள்ளனர். இது தொடர்பாக ஷின்குவா பல்கலைக்கழக சர்வதேச மையத்தின் தலைவர் டாக்டர் ஜியாங் ஜிங்குய் கூறியுள்ளதாவது,
இந்தியாவின், குறிப்பாக ஹிந்து மதத்தின் மிகப் பெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், பல நுாற்றாண்டுகளுக்கு முன், சீனாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக புத்த மத நுால்களின் வாயிலாக, ராமாயணம் சீனாவில் அறிமுகமானது.
இது, சீனாவின் முக்கியமான ஹான் கலாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் கலாசாரம் குறித்த புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறது. ராமாயணத்தில் உள்ள தசரசன், ஹனுமான் ஆகியோரின் பெயர்கள், இந்த கலாசாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.