கர்பிணிகள் சுந்தரகாண்டம் படித்தால் குழந்தைக்கு நல்லது - தமிழிசை அறிவுரை!
பெண்கள் கர்ப்பகாலத்தில் இதிகாசங்களை படித்தால் குழந்தைக்கு நல்லது என்று தமிழிசை கூறியுள்ளார்.
ஆளுநர்
தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதற்கு இணையான ராஷ்ட்ர சேவிகா சங்கத்தின் ஒரு பிரிவான சம்வர்தினி நியாஸ் மூலம் உருவாக்கப்பட்ட `கர்ப்ப சன்ஸ்கார்' திட்டத்தை காணொளி மூலம் நேற்று தொடங்கிவைத்தார்.
இது தாய்மார்களுக்கு, கர்ப்பம் தரித்தது முதல் குழந்தையின் இரண்டரை வயதுவரை பகவத் கீதை, ராமாயணம் போன்ற மத நூல்களைப் படித்தல், சம்ஸ்கிருத மந்திரங்களை உச்சரித்தல், யோகா பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவற்றைப் பரிந்துரைக்கிறது.
அறிவுரை
இதனை தொடர்ந்து, ஆளுநர் பேசுகையில், "கிராமங்களில் கர்ப்பிணிகள் ராமாயணம், மகாபாரதம் உட்பட பிற இதிகாசங்கள் மற்றும் நல்ல கதைகளைப் படிப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
குறிப்பாக தமிழ்நாட்டில், கர்ப்பிணிகள் கம்ப ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, கர்ப்பகாலத்தில் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது" என்று அறிவுரை கூறியுள்ளார்.