கழுத்தை நெறித்து மகள் கொடூரக் கொலை - தந்தையும், மகனும் தற்கொலை!
மகளை, தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடன் தொல்லை
சேலம், மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்(54). கெமிக்கல் நிருவனத்தை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி நிர்மலா(50). இவர்களுகு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அதில் மகன் தந்தையுடன் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கோவையில் படித்துக் கொண்டிருந்த மகள் பூஜா விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கிடையில், நிர்மலா வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதில், பூஜா கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
கொடூர கொலை
அருகே, தந்தையும் மகனும் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்துள்ளனர். இதனைப்பார்த்து அலறிய நிர்மலா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரிசோதித்ததில் மூவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
அதன்பின், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, கடன் பிரச்சனை இருந்ததாக உறவினர்கள் கூறியதாகவும், மேலும் காதல் விவகாரமாகவும் இருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.