பெண் மருத்துவர் கொடூர கொலை - தந்தைக்கு நடிகர் மம்முட்டி நேரில் சென்று ஆறுதல்!
பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் மம்முட்டி அவரின் தந்தைக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பெண் மருத்துவர் கொலை
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியிலுள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் சந்தீப்.
இவர் மது போதைக்கு அடிமையானதால் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
மேலும், இவர் அடிதடி வழக்கில் சிக்கியதால் இவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முன் மருத்துவமனைக்கு அழைத்து செய்யப்பட்டார்.
அப்பொழுது சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது திடீரென அவர் அங்கு இருந்த கத்திரையை கொண்டு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த பெண் மருத்துவரை சரமாரியாக குத்தியுள்ளார்.
நடிகர் ஆறுதல்
இந்நிலையில், அவரை உடனே தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர், அனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் தனது பெற்றோர் மோகன்தாஸ், வசந்தகுமாரிக்கு ஒரே மகள் ஆவார்.
அதனால் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் வகையில், நடிகர் மம்முட்டி அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரது தந்தை மோகன்தாசுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.