காதலியின் தந்தைக்கு போட்ட ஸ்கெட்ச்.. போதையில் மாறிப்போச்சு, இளைஞரின் வெறிச்செயல் - கொடூரக் கொலை!
இளைஞர் ஒருவர் காதலியின் தந்தைக்கு பதிலாக முதியவரை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில், பொங்குடி (65) என்பவர் ஓய்வுபெற்ற ஆலைத் தொழிலாளி. இவர் தனது மனைவி பாண்டியம்மாளுடன் வசித்துவருகிறார். இவர்களது மகன் மற்றும் மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு மாடியையும், வீட்டுக்கு அருகில் கட்டியிருக்கும் வீடுகளையும் வாடகைக்குவிட்டு ஓய்வுக்காலத்தை கழித்துவந்தனர்.
அப்பொழுது இரண்டு இளைஞர்கள் திடீரென வீட்டிற்குள் நுளைந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பொங்குடியை வெட்டி, படுகொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றனர். இது குறித்து கரிமேடு காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஒருதலைக்காதல்
இந்நிலையில், விசாரணை நடத்திய போலீசார் 19 வயதே ஆன முத்தமிழன், அருணாச்சாலம் என்ற இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் விசாரணையில், கொலைசெய்யப்பட்ட முதியவர் பொங்குடியின் வீட்டு மாடியில் வசித்துவரும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை முத்தமிழன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
அவர் தினமும் அந்த பெண்ணை பின்தொடர்ந்துள்ளார், இது குறித்து அந்த பெண் தனது தந்தையிடம் கூற அவர் அந்த இளைஞரை பொதுவெளியில் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் அந்த இளைஞர் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அவரைக் கொலைசெய்ய நண்பன் அருணாசலத்துடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்.
அப்பொழுது கொலை செய்ய நோட்டமிட்டு கொண்டிருந்தனர், அப்பொழுது மதுபோதையில் கீழ் வீட்டில் இருந்த பொங்குடியை அந்த பெண்ணின் தந்தை என்று நினைத்து கொலை செய்து விட்டனர். பிறகுதான் தாங்கள் கொலைசெய்தது அந்தப் பெண்ணின் தந்தை அல்ல என்பது தெரிந்து அங்கிருந்து தப்பியோடியிருக்கின்றனர்.