மகளுக்கு லவ் டார்ச்சர்.. தந்தையை பாம்பை வீசி கொல்ல முயன்ற இளைஞன் - அதிர்ச்சி!
இளைஞர் ஒருவர் தன் காதலியின் தந்தையை பாம்பை வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதல்
கேரள மாநிலம், திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. இவருக்கு ஒரு மகள் உள்ளார், அதே பகுதியை சேர்ந்த கிச்சு என்ற 30 வயது இளைஞர் ஒருதலையாக காதலித்துள்ளார். அதனால் அவரது மங்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அந்த பெண்ணின் தந்தை அந்த இளைஞரை அழைத்து கண்டித்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் ராஜூவை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று முன்தினம் அதிகாலை ராஜூவின் வீட்டுக்கு சென்று ஜன்னல் வழியாக பாம்பு ஒன்றை ராஜூவின் அறைக்குள் வீசியுள்ளார்.
கொலை முயற்சி
இந்நிலையில், வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்தனர், அப்பொழுது பைக்கில் சென்ற இளைஞரை பிடிக்க முயன்றுள்ளனர். அனால் அவர் பைக்கில் தப்பினார், பின்னர், பைக் நம்பரை நோட் செய்து போலீசில் புகாரளித்தார். அந்த நம்பரை வைத்து போலீசர் கிச்சுவை பிடித்தனர்,
அவரிடம் விசாரணை நடத்தியதில், ராஜூ வீட்டுக்குள் பாம்பு வீசியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து அடித்துக் கொல்லப்பட்ட பாம்பை மீட்ட போலீஸார், அது குறித்து பரிசோதிக்க கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றனர். கொலை முயற்சி வழக்கில் கிச்சுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.