சிறுக சிறுக சேர்த்த நாணயங்கள் - மூட்டை மூட்டையாக கொண்டு வந்து பைக் வாங்கிய இளைஞர்
சிறு துளி பெரு வெள்ளம் என்று சொல்வார்கள். அதை தன் செயலில் நிரூபித்து காட்டியுள்ளார் இளைஞர் ஒருவர்.
அஸ்சாம் மாநிலம், ஹவுலி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சின்ன சிறு கடையை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
இதனையடுத்து, கடந்த 7, 8 மாதங்களாக தன் கடையில் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியாக 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நாயணயங்களை சேர்த்து வைத்து வந்துள்ளார். அவர் சேமித்த நாணயங்களை பெரிய மூட்டையாக எடுத்துக் கொண்டு ஸ்கூட்டர் வாங்க ஷோரூமுக்கு வந்துள்ளார்.
இதைப் பார்த்த பைக் ஷோரூம் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து மூட்டைகளிலிருந்த நாணயங்களை எண்ணினார்கள். பிறகு ஸ்கூட்டருக்கான தொகையை எடுத்துக் கொண்டனர்.
இதனையடுத்து, ஆவணங்களில் கையொப்பமிட்டு, தன் ஸ்கூட்டருக்கான சாவியை பெற்றுக் கொண்டார் அந்த இளைஞர். இளைஞரின், உழைப்பையும், பொறுமையையும், சேமிக்கும் திறனையும் அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.