மகிழ்ச்சியாக இல்லை; எலான் மஸ்க் கூறியதை மறுத்த தந்தை - பின்னணி என்ன?

Elon Musk Errol Musk Tesla
By Sumathi Feb 01, 2025 09:00 AM GMT
Report

எலான் மஸ்க் தகவலுக்கு தந்தை எரால் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடுத்தர வருமானம்

பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். எக்ஸ் வலைத்தளம், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனர். முன்னதாக எலான் மஸ்க் அளித்த பேட்டி ஒன்றில்,

elon musk - errol musk

தான் ஏழ்மையான நிலையில் வளர்ந்தேன். தனது குடும்பம் நடுத்தர வருமானம் கொண்டதாக இருந்த போதும், தனது குழந்தை பருவம் மகிழ்ச்சியானதாக இல்லை.

காதல் தோல்வி முக்கியம்; 3 டேட்டிங் அனுபவம் வேண்டும் - வேலைக்கு நிறுவனம் கோரிக்கை!

காதல் தோல்வி முக்கியம்; 3 டேட்டிங் அனுபவம் வேண்டும் - வேலைக்கு நிறுவனம் கோரிக்கை!

தந்தை மறுப்பு

தனது தந்தை சிறிய எலக்ட்ரிக்கல், மெக்கானிக் பொறியியல் நிறுவனத்தை 20 முதல் 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வந்த போதும், வருமானம் குறைந்து 25 ஆண்டுகளாக திவால் நிலையில் இருந்தார். நிதி தேவைக்காக தனது அண்ணன் மற்றும் தன்னை நம்பி தந்தை இருந்தார் எனத் தெரிவித்திருந்தார்.

மகிழ்ச்சியாக இல்லை; எலான் மஸ்க் கூறியதை மறுத்த தந்தை - பின்னணி என்ன? | Father Says Elon Musk Went To School In Rollsroyce

இந்நிலையில், தனியார் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்கின் தந்தை எரால் மஸ்க், தனது மகன் எலான் மஸ்க் ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் பள்ளிக்கு சென்று வந்தார்.

தனது 26 வயதில், 48 வயதுடையவரிடம் என்ன இருக்குமோ அனைத்து வசதிகளும் தன்னிடம் இருந்தது. சொந்தமாக வீடு, தனி விமானம் என அனைத்தும் இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது கவனம் பெற்று வருகிறது.