எவ்வளவு பணம் எண்ண முடியுதோ.. அதுதான் போனஸ் - நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
எவ்வளவு பணத்தை எண்ண முடிகிறதோ, அதனை போனஸாக எடுத்துக் கொள்ளலாம் என நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
போனஸ் ஆஃபர்
சீனா, முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஹெனான் மைன் கிரேன். இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வித்தியாசமான முறையில் போனஸ் வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு பெரிய மேஜையில் 70 கோடி ரூபாயை வைத்து அதன் பின்னர் தனது ஊழியர்களை அழைத்துள்ளனர். தொடர்ந்து அந்த டேபிளில் வைக்கப்பட்டுள்ள பணத்தை உங்களால் எவ்வளவு எண்ண முடியுமோ,
நிறுவனம் அதிரடி
அவ்வளவு எண்ணி அந்த பணம் முழுவதும் நீங்கள் போனஸாக வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை எண்ணினர்.
இதில் ஊழியர் ஒருவர் 15 நிமிடங்களில் சுமார் ஒரு லட்சம் யுவான் வரை எண்ணியதாகவும் அவருக்கு அந்த பணம் போனஸாக கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக போனஸ் கிடைத்ததாக பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.