இந்தியர்களுக்கு அடித்த லக்; விசா ரூல்ஸை மாற்றிய நியூசிலாந்து - இதை கவனிங்க!
நியூசிலாந்து அதன் விசா கட்டுப்பாடுகளை மாற்றியுள்ளது.
விசா கட்டுப்பாடு
நியூசிலாந்து விசா தொடர்பான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து தளர்த்தி வருகிறது. கொரோனாவுக்கு பின் ஒர்க் ஃபர்ம் ஹோம் முறை அதிகரித்து வருகிறது.
தற்போது இவர்களுக்கான விதி நெறிமுறைகளைத் தான் தளர்த்தப் போவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சுற்றுலாப் பயணிகள் 90 நாட்கள் வரை தங்கலாம்.
வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் இவர்கள் நியூசிலாந்தில் இருந்தபடி 90 நாட்கள் வரை வேலை செய்யலாம். 90 நாட்களுக்கு மேலும் கூட இவர்கள் விருப்பப்பட்டால் இருக்கலாம்.
அரசு அறிவிப்பு
ஆனால், அதன் பிறகு சுற்றுலாப் பயணிகள் வரியை (resident tax) செலுத்த வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் கூறுகையில்,
"விதிகளில் நாங்கள் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். இது நியூசிலாந்திற்கு வரும் மக்கள் அதிக நேரம் தங்குவதை உறுதி செய்யும்.
அவர்கள் இங்கு அதிக நாட்கள் இருக்கும் போது, இங்கேயே அதிகம் செலவு செய்வார்கள். இது நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.