சேலையை உருவிடுவேன்...தலைமை ஆசிரியை ஆபாசமாக திட்டிய மாணவியின் தந்தை!
மதுபோதையில் பள்ளிக்கு புகுந்து ஆசிரியர்களை தகாத வார்த்தையால் பேசி கலாட்டாவில் ஈடுபட்ட மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுபோதை
தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்துவருகின்றனர்.
நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் வந்தனர். காலை 9.30 மணி அளவில் பள்ளியின் முன்புறம் உள்ள திடலில் வழிபாடு நடைபெற்றது. இதில் திடல் முன்பு இருந்த மேடையில் தலைமையாசிரியை உள்பட பல ஆசிரியர், ஆசிரியைகள் நின்று கொண்டிருந்தனர்.
மாணவியின் தந்தை
அப்போது திடீரென பள்ளி வளாகத்துக்குள் போதையில் வந்த மாணவியின் தந்தை செல்வக்குமார்(39) என்பவர் மேடை மீது ஏறி ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அவரிடம் தலைமை ஆசிரியை ஷீலா கரோலின் வெளியே போகும் படி கூறியுள்ளார். இதை பொருட்படுத்தாத செல்வகுமார் தலைமை ஆசிரியையை தொடர்ந்து ஆபாச வார்த்தைகளை பேசினார்.
ஆபாச வார்த்தை
நீ பொம்பள தான உன் சேலையை அவிழ்த்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதை உடற்கல்வி ஆசிரியர் சண்முகம் தட்டி கேட்ட போது, அவரை செல்வகுமார் முகத்தில் தாக்கினார்.
மற்றொரு ஆசிரியர் மேலும் மற்றொரு ஆசிரியர் மருதுபூபதியையும் செல்வகுமார் தாக்கினார். இதனால் அங்கிருந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கைது
இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கவனம் தேவை... ஆசியாவிலும் நுழைந்த குரங்கு அம்மை!