கவனம் தேவை... ஆசியாவிலும் நுழைந்த குரங்கு அம்மை!
மேற்காசிய நாடான லெபனானிலும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது உலக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குரங்கு அம்மை
பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது.
லெபனான்
இந்நிலையில், மேற்காசிய நாடுகளில் ஒன்றான லெபனானில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய அந்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டதும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
16 லட்சம் சம்பளத்தில் ஜோதிடர் நியமனம்.. என்ன நடக்குது இந்திய கால்பந்து அணியில்?