துணை நடிகைக்கு மாமனார் பாலியல் தொல்லை - உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டதாக பரபரப்பு புகார்..!
சென்னை போரூர் அருகே மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,உருட்டு கட்டையால் தன்னை தாக்கியதாகவும் துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
துணை நடிகைக்கு மாமனார் பாலியல் தொல்லை
சென்னை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கம் பாலகிருஷ்ணண் நகர் பகுதியை வசித்து வருபவர் பிரபல துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் . இவர் சினிமாவில் துணை நடிகையாகவும் சீரியல்களில் இவர் பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.
இதனிடையே 17 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு சுரேஷ்குமார் என்பவருடன் திருமணமாகி ஆனது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர் .
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த துணை நடிகை "நான் நடிகையாக இருப்பதால் என் மாமனார் சரவணவேல், மாமியார் சாந்தி ஆகியோர் என்னை மதிப்பதில்லை.
பல முறை என் மாமனார் நீ நடிகை தானே என கேட்டு என் மீது உடல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். இது குறித்து காவல் துறையினரிடம் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததில்லை, இதற்கு காரணம் என் மாமியாரின் நெருங்கிய உறவினர் காவல்துறையில் மிக உயரிய பதவியில் இருப்பது தான்.
கொலை வெறி தாக்குதல்
சில தினங்களுக்கு முன்பு கூட என் மாமனார் என்னை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.நான் அவரை தடுத்ததால் பெரிய மர கட்டையை கொண்டு என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார்.
இதனால் பலத்த காயம் அடைந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். இது குறித்து மாங்காடு காவல் துறையினரிடம் புகார் அளித்தும் என் மாமனாரை விசாரிக்க அவர்கள் மறுக்கிறார்கள்.
தலைமறைவாக இருக்கும் மாமனாரை கைது செய்து தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே துணை நடிகையை அவரது மாமனார் தாக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது மாங்காடு காவல் நிலையத்தில் புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அது தொடர்பாக துணை நடிகையின் மாமனார் மற்றும் மாமியாரை விசாரிக்க முயன்ற போது அவர்கள் தலைமறைவானர்.
மேலும் புகார் தெரிவித்துள்ள துணை நடிகை ரஜினியின் அண்ணாத்த, எதற்க்கும் துணிந்தவன், சிவகுமார் சபதம், நட்பே துணை, தேவராட்டம், துப்பறிவாளன், சீரியலில் பேரன்பு உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.