கத்தியை காட்டி மிரட்டி, ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் - துணை நடிகை போலீசில் பரபரப்பு புகார் - நடந்தது என்ன?
சென்னை வளசரவாக்கம், ஏ.கே.ஆர் நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் சினிமா துணை நடிகையாக உள்ளார். இவர் நேற்று வளசரவாக்கம் போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்தார்.
அந்த புகாரில்,
நேற்று முன் தினம் இரவு என் யாரோ வீட்டின் கதைவை தட்டினார்கள். நான் கதவை திறக்கும்போது, அதிரடியாக 2 இளைஞர்கள் என் வீட்டிற்குள் நுழைந்தனர். இதனையடுத்து, என்னை அவர்கள் என் ஆடைகளை களையச் சொல்லி அதட்டி மிரட்டினார்கள்.
அப்போது, நான் பயந்துபோய் என் ஆடைகளை களைத்தேன். அப்போது, அதை அவர்கள் செல்போன் மூலம் படமெடுத்துக் கொண்டு, என் வீட்டில் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய், நான் அணிந்திருந்த 10 கிராம் தங்க நகைகளை பறித்து விட்டுச் சென்று விட்டார்கள் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்கள்.
அந்த கேமராவில் இரண்டு இளைஞர்கள் அவ்வழியாக தப்பித்துச் சென்றது பதிவாகியிருந்தது.
இதன் பின்பு, கொள்ளையில் ஈடுபட்ட அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
நடிகை விஜயலட்சுமி பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அவருக்கு கண்ணதாசன் வாடிக்கையாளர்களை அழைத்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில்தான், விஜயலட்சுமியிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க கண்ணதாசன் திட்டிமிட்டிருந்தார்.
தனது கூட்டாளி செல்வகுமாரை வாடிக்கையாளர் போல் விஜயலட்சுமி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமியுடன் செல்வகுமார் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதன் பின்புதான், கத்தியை காட்டி மிரட்டி இருவரும் விஜயலட்சுமியிடம் இருந்து 10 கிராம் நகை, 50 ஆயிரம் ரொக்கத்தை பறித்து, விஜயலட்சுமியை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து கொண்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.