பெண்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போதை ஆசாமி கைது!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பெண் உட்பட 4 பேர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போதை ஆசாமியை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு தாமஸ் சாலை பகுதியில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனா ல் அப்பகுதி மக்கள் சிலர் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கஞ்சா போதை ஆசாமி ஒருவர் தகாத வார்த்தைகளால் சத்தமாக கத்தி கொண்டே வந்துள்ளனர். இதை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் தட்டி கேட்க முற்பட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் உமா ராணி, பலராமன், கோபி உட்பட 4 பேருக்கு உடல் முழுவது பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தப்பியோட முயன்ற அந்த போதை ஆசாமியை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்ட போதை ஆசாமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.