ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் - ஆத்திரத்தில் மாமனார் செய்த கொடூர செயல்
ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை, மாமனார் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுத்த மருமகள்
கர்நாடகா, ஜூலமேரா கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கையா. இவரது மருமகள் ஜாலம்மா. மகன் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் ராமலிங்கையா, மருமகள் ஜாலம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 3 முறை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
மாமனார் வெறிச்செயல்
ஒருகட்டத்தில் தனது ஆசைக்கு இணங்கும்படி அவரை வற்புறுத்தியுள்ளார். இதில் கூச்சலிட்டதால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், மரக்கட்டையை கொண்டு அவரது தலையில் அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த மருமகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனே ராமலிங்கையா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராமலிங்கையாவை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.