ஒருதலை காதல்.. பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம் - இளைஞர் வெறிச்செயல்!
பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதல்..
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா. இவருக்கு வேலை எதுவும் இல்லை. தினமும் ஊர் சுற்றுவதை வழக்காமக் வைத்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி மீது காதல் வயப்பட்டு ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து ராகவேந்திரா அந்த மாணவியை பின் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பள்ளியில் படிக்கும் அந்த மாணவி அவரின் காதலை ஏற்காமல் மறுத்து இருக்கிறார்.
இதனாக் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, ஒரு பாட்டிலில் பெட்ரோலை மறைத்து எடுத்துக்கொண்டு அந்த மாணவி தனியாக இருக்கும் நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று தன்னை காதலிக்குமாறு பலவந்தமாக வற்புறுத்தியுள்ளார். ஆனால், மாணவி அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார்.
பள்ளி மாணவி
அப்போது ராகவேந்திரா மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மாணவி மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். தீ உடல் முழுக்க பரவ மாணவி அலறி துடித்துள்ளார். இவரின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.
அப்போது மாணவி உடல் முழுக்க தீப் பற்றி எரிந்த நிலையில் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், ராகவேந்திராவின் உடையிலும் தீப்பற்றி அதன் காரணமாக அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.
இதையறிந்து விரைந்து வந்த போலீசார், ராகவேந்திராவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பலியான மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த நிலையில், போலீசார் இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.