4 நாள்; இறந்த மனைவியின் உடலை பிணவறையில் வைத்த கணவன் - திடுக்கிடும் காரணம்!
இறந்த மனைவியின் உடலை கணவர் 4 நாட்களாக பிணவறையில் வைத்திருந்துள்ளார்.
தாய் இறப்பு
இலங்கையில், பெண் ஒருவர் குடும்பத்தினருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அதன் பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு தொடர் இருமல் எடுத்துள்ளது.
அதன்பின், மயங்கி விழுந்துள்ளார். உடனே, குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் உயிரிழந்தார்.
மறைத்த தந்தை
அந்த சமயத்தில் உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருந்துள்ளது. தொடர்ந்து, தாய் உயிரிழந்த தகவல் தெரிந்தால் மகன் சரிவர தேர்வு எழுத மாட்டான் என்று எண்ணிய தந்தை மற்றும் குடும்பத்தினர் அந்த பெண்ணின் இறப்பை மறைத்துள்ளனர்.
இதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி அந்த பெண்ணின் உடலை மருத்துவமனையின் பிணவறையில் 4 நாட்களாக வைத்திருந்துருந்துள்ளனர்.
தேர்வு முடிந்த பின் வீட்டிற்கு உடலை எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.