மாரடைப்பில் 25 வயது புது மாப்பிள்ளை மரணம் - ஷாக்கில் மாடியில் இருந்து விழுந்து இறந்த மனைவி!

Delhi Heart Attack Death
By Sumathi Feb 28, 2024 07:42 AM GMT
Report

25 வயது இளைஞர் மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பு

அபிஷேக் மற்றும் அஞ்சலி தம்பதி 3 மாதத்திற்கு முன் திருமணம் செய்தனர். இருவரும் டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவை பார்வையிட சென்றுள்ளனர். அப்போது திடீரென அபிஷேக்-கிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

abishek - anjali

உடனே அவரது மனைவி அவரின் நண்பர்களுடன் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அபிஷேக் உயிரிழந்தார். தொடர்ந்து, மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடுவானில் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம் - பதறிய விமானி

நடுவானில் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம் - பதறிய விமானி

கனவனுக்காக உயிரைவிட்ட மனைவி

அதன்பின், அவரது உடல், காஜியாபாத்தில் உள்ள அவர்களின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், அவரின் உடலைப் பார்த்து மனைவி அழுதுக்கொண்டே திடீரென ஓடி 7-வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

மாரடைப்பில் 25 வயது புது மாப்பிள்ளை மரணம் - ஷாக்கில் மாடியில் இருந்து விழுந்து இறந்த மனைவி! | 25 Year Old Man Died By Heart Attack Wife Dead

பலத்த காயங்களுடன் அஞ்சலியை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.