8 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை- உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு..கதறும் தந்தை!
8 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 10 மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மதுரை
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நுண் கலை ஓவியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து, மனைவி 10 வயது மகன் மற்றும் 8 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது மனைவி, வெறு ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அவப்போது நண்பர்கள் என்ற முறையில் வீட்டிற்குப் பலமுறை வந்து சென்றுள்ளனர்.
இதனை அறிந்த கணவர் மனைவியை எச்சரித்துள்ளார். அப்போது தன்னை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக 8 வயதுடைய மகள் தந்தையிடம் அழுதுக்கொண்டே சொல்லியிருக்கிறார்.இதனைக் கேட்டுத் துடித்துப்போன தந்தை சிறுமியிடம் நடந்த சம்பவங்கள் குறித்துவிசாரித்தபோதுதான், பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அலைக்கழிக்கப்பட்டு, இறுதியாகச் சம்மந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
இந்த சம்பவத்தால் என் மகள் பயிலும் பள்ளிக்கும், என் வீட்டிற்கும் வந்து மிரட்டுவதோடு, குழந்தையைக் கடத்துவதற்குத் தொடர்ந்து முயல்கிறார்கள். எந்நேரமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழுகின்ற நிலைக்கு நானும் எனது குழந்தைகளும் தள்ளப்பட்டுள்ளாத பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தெரிவித்தார்.
என் குழந்தைகள் சுதந்திரமாகப் பள்ளி செல்லும் சூழ்நிலை இல்லை. ஆகையால், தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குறிப்பிட்ட அந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.