தவெக மாநாடு பந்தலைப் பார்த்த உற்சாகம்..ரயிலில் இருந்த இளைஞர் எடுத்த வீபரித முடிவு!
தமிழக வெற்றிக்கழக மாநாடு பந்தலைப் பார்த்த உற்சாகத்தில் ரயிலிலிருந்து குதித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தவெக மாநாடு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான முறையில் விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் நேற்று இரவிலிருந்து வரத்தொடங்கி விட்டனர்.இதனால் அந்த பகுதி முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் ரயிலில் விழுப்புரத்துக்கு டிக்கெட் எடுத்துச் சென்றார். இந்த ரயில் இன்று அதிகாலையில் விக்கிரவாண்டியில் சென்றது. அப்போது தண்டவாளத்தையொட்டி 50 மீட்டர் இடைவெளியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பந்தல் உள்ளது.
தொண்டர் பலி
இதனால் மாநாட்டுப் பந்தலில் மின்விளக்குகள் ஒளிர்ந்துள்ளது. இதனைப் பார்த்த உற்சாக மிகுதியில் நிதிஷ்குமார் உள்பட 2 பேர் ரயிலிலிருந்து கீழே இறங்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில் மெதுவாகச் சென்ற ரயிலிலிருந்து இருவரும் கீழே குதித்தனர்.
இதில் நிதிஷ்குமார் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நிதிஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடனிருந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சென்னை தேனாம்பேட்டை சிக்கெனலில் நடிகர் விஜயின் கட்சியைச் சேர்ந்த 2 தொண்டர்கள் சென்ற இருசக்கர வாகனமும், லாரியும் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.