தவெக மாநாடு..விஜய் என்ன சொல்லப்போகிறார்? எதிர்பார்ப்பில் தமிழ்நாடு அரசியல் களம்!
தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தவெக மாநாடு
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது.85 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டுக்காக ஏற்பாடு பணிகளை தவெக நிர்வாகிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக மேற்கொண்டு வந்தனர்.
தற்பொழுது பணிகள் நிறைவடைந்த நிலையில் தலைவர்களின் கட் அவுட்ஸ், மாநாட்டு திடலை அலங்கரிக்கின்றன.மாநாட்டு மேடைக்கு அருகில் சட்டமேதை அம்பேதார், பெரியார், பெருந்தலைவர் காமராஜர், விஜய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளான வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேடைக்கு வலது புறம் தமிழன்னை, சேரர், சோழ, பாண்டியர் மன்னர்கள் மற்றும் விஜய் கட் அவுட் அமைக்கபட்டுள்ளது. மேலும் மாநாட்டு மேடையில் "வெற்றிக் சொள்கை திருவிழா" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது மாநாட்டு திடலின் முகப்பு செயின்ட் ஜார்ஜ்ஸ் மூட போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்ன சொல்லப்போகிறார்?
மாநாட்டு திடலுக்கு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ரிமோட்மூலம் 100 அடி உயரத்தில் தனது கட்சிக் கொடியை ஏற்றிவைக்கவுள்ளன. தவெக மாநாட்டிற்காக காவல்துறையிடம் அனுமதி பெற்றபடி, தொண்டர்கள் அமர 40 கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுத் திடலில் 50 ஆயிரம் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன அதுமட்டுமில்லாது152 ஏக்கரில் மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த பிரமாண்ட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அசியல் வருகைக்கு பின் முதல் முறையாக மாநாட்டில் உரையாற்றப்போகும் விஜய் என்னசொல்லப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாடு அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.